வாடிக்கையாளர்களின் சேவையில் தன்னிறைவு பெற்ற ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ்
About Us
பாரம்பரிய தங்க நகை ஆபரணங்கள் செய்வதில் சுமார் 60 ஆண்டுகள் அனுபவங்களோடு எங்கள் தந்தையார் மதிப்பிற்குரிய திரு சோமசுந்தரம் ஆச்சாரியார் அவர்களின் சீறிய முயற்சியோடும் ,சிறிய முதலீட்டோடும் புதுக்கோட்டை மாநகரில் நெல்லுமண்டித் தெருவில் ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் என்ற நிறுவனத்தை 1980 ம் ஆண்டு தொடங்கினோம். எங்கள் தந்தையார் மற்றும் எங்களின் முயற்சியினால் நாங்கள் பாரம்பரியமாக நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருந்ததாலும் , அழகிய வேலைபாடுகள் நிறைந்த தங்க ஆபரணங்கள் செய்யும் நிபுணத்துவம் பெற்று இருந்ததாலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் திருப்தி அடையும் வகையில் நகைகள் செய்து கொடுப்பதினாலும் , வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் , அவர்களின் சேவையில் நன்மதிப்பையும் பெற்று திகழ்கிறோம்.
தங்க நகை பாரம்பரியம் ,உழைப்பு, நேர்மை ,உயர்வு இவைகளை தாரக மந்திரங்களாக கொண்டு வாடிக்கையாளர்களின் பேராதரவினால் நாற்பத்தி நான்கு ஆண்டுகள் தங்க நகை ஆபரணங்கள் செய்யும் கைதேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களால் வாடிக்கையாளர்களின் விருப்பம் , தேர்வு மாறிவரும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆர்டரின் பேரில் நேர்த்தியாக ,உறுதியாக , தரமாக மிக சிறந்த முறையில் தங்க நகைகள் செய்து கொடுப்பதின் பலனாகவும் எங்கள் ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் வாடிக்கையாளர்களின் வெகுமதியைப் பெற்று நகரின் கைராசியான தங்கநகை நிறுவனமாக திகழ்கிறது.
மாற்றுக் குறையாத தங்கம் மறக்க முடியாத நிறுவனம் என்ற வகையில் கடையின் தரைதளத்தில் எண்ணற்ற டிசைன்களுடன் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தங்க செயின் ,மோதிரம் ,தோடு ,ஜிமிக்கி ,கைச்செயின்களும் மற்றும் முதல் தளத்தில் வாடிக்கையார்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க நெக்லஸ் ,ஆரம் ,வளையல்கள் மற்றும் 15 வகையான வெள்ளி கொலுசுகளின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்கள் , வெள்ளி பரிசு பொருள்கள் ,செட்டிநாடு பாத்திர வகைகளும் , இரண்டாம் தளத்தில் வெள்ளி மோதிரம் ,கைச்செயின் , 92.5 silver ஆன்டிக் கலெக்ஷன்ஸ் மாலை,நெக்லஸ், செயின் விற்பனை செய்யப்படுகிறது..
தங்கள் தங்க மகளுக்கு தங்க பாரம்பரியத்தை பரிசளிக்கும் வகையில் எண்ணிலடங்கா டிசைன்களுடன் திருமண நகைகளை பாரம்பரியமும் புதுமையும் கலந்த கலவையாக மனதை கவரும் வகையில் மிக குறைந்த எடை முதல் அறிமுகம் செய்து உள்ளோம். .


எங்களிடம் அனைத்து வகையான தங்க நகைகள் எண்ணற்ற எண்ணிக்கையில் எண்ணிலடங்கா டிசைன்களுடன் ஒரே இடத்தில் BIS ஹால்மார்க் HUID மற்றும் 916 முத்திரையுடன் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் மன திருப்தியுடன் வாங்கி செல்கின்றனர் .
வைர நகைகளின் கலெக்ஷன்களான வைர மோதிரம் ,மூக்குத்தி , நெக்ல்ஸ் ,ராசிக்கற்கள் அனைத்தும் தோஷம் நீக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது .எங்களது கடையில் ஒவ்வொரு விழா காலங்களிலும் விதவிதமான சலுகைகள் வேறெங்கும் இல்லாத வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம் .
எங்களின் இந்த மகத்தான வளர்ச்சிக்கும் ,வெற்றிக்கும் ,கைராசியான ஸ்தாபனம் ,உழைப்பு ,உயர்வு ,நேர்மை ,நேர்த்தியான பாரம்பரியம் மிக்க நிறுவனம் ,மாற்றுக் குறையாத தங்கம் மறக்க முடியாத ஆபரண நகைகள் என்று புதுக்கோட்டை நகர மக்கள் மட்டுமின்றி மாவட்டம் கடந்து திருச்சி ,தஞ்சாவூர் ,சென்னை ,கோவை ,மதுரை ,பாண்டிச்சேரி என்று அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கைராசியான ஸ்தாபனம் எங்கள் நெல்லுமண்டி தெரு ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லர்ஸ் தான் .
எங்களின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் குபேரலக்ஷ்மி , செய்கூலி சேதாரம் இல்லாத அஷ்டலெக்ஷ்மி , பழைய தங்க நகைகளுக்கு ஸ்ரீ ஸ்வர்ணதாரா, அக்சரா ,பெண்மகளுக்கு பொன்மகள், ஆகிய தங்க நகை சேமிப்பு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .எங்களின் தங்க நகை சேமிப்பு திட்டங்கள் 500,1000,2000,5000 ரூபாய் முதல் என பல்வேறு திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது .மேலும் நகை சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு மனம் கவரும் வகையில் அழகான நிச்சய பரிசுகளும் வழங்கி வருகிறோம்.
வாடிக்கையாளர்கள் பேராதரவுக்கு இணங்க நகை சேமிப்பு திட்ட கிளைகள் தஞ்சாவூர் ரோடு மடத்து கடை வீதி ஆதனக்கோட்டை பகுதியிலும் ,பிரின்ஸ் டவர் திருவள்ளுவர் சாலை வடகாடு முக்கம் ஆலங்குடி ஆகிய பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .மாற்று குறையாத தங்கம் மறக்க முடியாத ஸ்தாபனம் நெல்லுமண்டி தெரு ஸ்ரீ புவனேஸ்வரி ஜீவல்லரியில் தங்கம் ,வெள்ளி ஆபரணங்களை மனநிறைவோடும் கைராசியுடனும் வாங்க அன்புடன் அழைக்கிறோம் ..அதே இடம் ,அதே தரம் …இந்த தகவலை நிர்வாக இயக்குனர் S .வெங்கடேசன் தெரிவித்துள்ளார் .தொடர்புக்கு 04322222504,04322222505
